இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மற்றும் மேற்கு சுலவேசி பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 7.5 என்ற அளவில் பதிவாகியிருந்தது.இந்நிலையில் சுலாவேசி தீவில் உள்ள பாலு என்ற இடத்தில் சுனாமி தாக்கியுள்ளது.சுனாமி தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
சுனாமி தாக்கியபோது கடல் அலைகள் 6 அடி உயரத்துக்கு எழுந்து ஊருக்குள் சென்றன. அலையானது அங்கிருந்த பொருட்களை அடித்து செல்லும் காட்சிகள்,காண்போருக்கு பதைபதைப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இதில் மசூதி ஒன்றும் சேதமாகியுள்ளது.
இதுகுறித்து பிபிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதுவரை 50 பேர் உயிரிழந்ததாகவும் கடுமையான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-ம் அதிகமானோர் உயிரிழந்தனர். 2004-ல் ஏற்பட்ட சுனாமியில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment